புது பயணம்
காணல் நீரின் ஓசை சாலை அதை கேட்குமோ, கால்கள் தடுமாறி போக கண்கள் அதை மீட்குமோ, பூவே பூவைச்சூடி காதல் கொண்டு வாழுதோ, அங்கே புற்கள் எல்லாம் பனியில் நீராடுதோ…
மேகமே கீழே வா என்னையும் ஏந்தி போ, சாரலாய் தோன்றி நீ எங்கள் புன்னகை பார்த்து போ, மாறா பெண் மாறா முழு மதியும் இங்குண்டு, வாரா ஊடே வாரா கோப மின்னலை விட்டுடு…
நாங்கள் இருவரும் தெருவினில் நடந்து செல்கிறோம், அவளது கொலுசுக்கு என் யாத்திசையும் சமர்ப்பணம், காற்றிலே கைகளை பறக்க வைத்து சிரிக்கிறோம், நடனங்கள் மனதிலே ஆடி மகிழ்கிறோம்…
இனி தினம் தினம் புது பயணமே மீண்டும் பிறக்கிறோம், புது மணல் புது காற்று, புது சுவாசம் புது உரையாடல், புது நினைவென கூடி நிற்கிறோம்…
💬 கருத்துகள் (0)