சிறகு
ஒரு சிறகும் பந்தும்
கீழே விழுகையில்…
பந்து விரைவாகக்
கீழே வந்துவிடும்.
ஆனால் சிறகோ,
வளியைக் கடந்து,
வலியை உணர்ந்து,
வழியை உருவாக்கும்.
இரண்டின் சிறப்புமே
அதன் எடை தான்…
பந்து இலக்கை
நொடிப்பொழுதில் அடைந்தது;
ஆனால் சிறகோ,
தன் பயணப் பாதையைப் புரிந்து
இலக்கை அடைந்தது.
நம்மிடம் என்ன இல்லை
என்பதை விடுத்து,
இருப்பதைக் கொண்டாடுவோம்!
💬 கருத்துகள் (0)