தாய்மை
கையினைப் பிடித்து
நடக்கச் செய்தவள் அவள்.
நடக்க முடியாதபோதும்
என்னைத் தூக்கிச் சென்றவள் அவள்.
மழலையோடு
பேச வைத்தவள் அவள்.
காலங்கள் கடந்தும்
என்னை மழலையாய் பார்ப்பதும் அவள்.
என்னைச் சிறு பிள்ளையாகக்
கொஞ்சுபவளும் அவள்.
என் எதிர்காலத்தை நினைத்து
அஞ்சுபவளும் அவள்.
என்னை யாரிடமும்
விட்டுக்கொடுக்காதவளும் அவள்.
எனக்காக எதையும்
விட்டுக்கொடுப்பவளும் அவள்.
பெண்மையின் உச்சப் பரிமாணமான
தாய்மையைக் காட்டிலும்
செம்மை உண்டோ?
💬 கருத்துகள் (0)