அம்மா
அந்தியோர் ஆகச் சிறந்த தினத்தில், அகச்சிவப்பு துளிகளில் இருந்து, அற்புதமாய் ஈன்றெடுத்தால், முதல் சந்திப்பு முத்தத்தில் ஆரம்பமாயிற்று,
வேடிக்கைக் காட்டி, வேடங்கள் போட்டு வெண் துணியினால் இறுக்கி, வேண்டிய அளவு அமிர்தம் அளித்து, கள்வனைக் காட்டி, காதோரம் சொன்னாள் அவர்தான் நீ உருவாக காரணமாயிற்று என்று,
உற்றார்கள் கூட ஒய்யாரமாக தன்சீலைக் கொண்ட பொன்னூஞ்சல் மெய்து, அப்போதே அகங்காரம் ஆரம்பம், பச்சை உடம்புக்காரிக்கு உறக்கமே காட்டமாட்டேன்,
நியாய விலைக் கடையின் அரிசியில் அம்மா கல் எடுக்கும் போதெல்லாம், குடில் எங்கும் சிட்டுக்குருவிகள் ஓடி திரிந்திருந்தது,
இப்போதும் சிட்டுக்கள் வீடு தேடி வருகின்றன, என்றைக்காவது கோலப்பொடியில் அம்மா அரிசி மாவை கலப்பாலா என்று, ஏமாந்து ஏங்கியே பார்த்தபடி நிற்கின்றன, அதுபோல
பாசத்திற்கு பஞ்சம் இல்லை, பண்டிகைக்கு பாகப் பிரிவினை இல்லை, என் ஏக்கம் எல்லாம், மழலையைப் போல் எப்போது மீண்டும் தூளியாடுவேன், தாய்மடியில்…
– இரகுபாலன்.
💬 கருத்துகள் (0)