அய்யன் வள்ளுவர் காட்டும் வழி
தெள்ளமுதான, தீந்தமிழில் வள்ளுவன் யாத்த, தமிழ் மறையாம் குறளிதனை, மறுவற கற்று, கற்றபடி ஏற்று, அன்பெனும் அறவழியில் நின்று, இல்லறம் நல்லறமாக செய்திடல் முறையாம்.
நங்கை தன் நற்குடும்பம் பேணிடல் நாட்டிற்கு தூயதொரு பணியாம். நீதிநெறி வழுவாது, நடுநிலைமை அரசு புரிதல் என்றும் நன்றாம்.
தீ வழி ஆட்சி செய்யல் சமுதாயக் கேடாம்.
ஒழுக்கம், வாய்மை தவறாமல் சேர்த்திடும் தேவர் உலகம். என்றே, அறிதல் இன்பமாம். காதலெனும் புனித பண்பதனை காமம் எனும் நெருப்பினால், நாசப்படுத்துதல் தமிழர்தம் வாழ்விற்கு முறையன்றாம். அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலே,
மதம், மொழி பேதங்களுக்கு அப்பாலே,
குன்றின் மேல் இட்ட விளக்கு போலே, உலகெலாம் ஒளி வீசி திகழ்வதாலே, வள்ளுவன் வகுத்த வழி இதனை, வணங்கி ஏற்றிடல் நம் கடமை.
💬 கருத்துகள் (0)