சுட்டு விரல்
மனிதன் என்பவன் சமூக விலங்கு.
சார்ந்து வாழும் சமூக அமைப்பில் சாதனை படைக்க, சரித்திரம் படைக்க, சஞ்சல மனதை சமன் செய்து, சீராக்கி சமூகத்தில் கண்டும், கேட்டும், பட்டும், சந்தித்த வாழ்வியல் சவால்களை, எதிர்கொள்ள முன்னோர், மூத்தோர்,மொழிந்தஅறங்களை, அமைதியுடன் ஆய்ந்து, அணுகி, அல்லல் நீக்கி, அருள்வழி சென்று, அன்பு, அர்ப்பணிப்பு, மனிதநேயம், சகிப்புத்தன்மை, தியாகம் எனும் பல தெய்வப்பண்புகளை, பெற்று ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் ஏற்றமிகு எண்ணத்தில் மனம் விரிந்து நிற்க வெப்பம், குளிர், தெப்பமாய் அமைய, வேண்டிய உதவிகளை, நாளும் செய்துவிட்டு அறியாமை, வறுமை, தீண்டாமை, வன்கொடுமை, அகற்றிட கல்வி எனும் கருவியால், காலத்தில் மாற்றம் நிகழ்த்தி, யாவரும் நலம் அடைந்திட மன்னுயிர் யாவும் தம்முயிர் என்று எண்ணி மனித வாழ்வின் மகத்துவம் காப்போம்!
💬 கருத்துகள் (0)