நினைத்தாலே இனிக்கும்
கம்பநாடனும் வள்ளுவனும் போற்றும் மங்களம் குறைய கன்னித்தமிழே இன்றும் பற்பல போராட்டங்களுக்கு இடையில் அணையா விளக்காய் ஒளி தரும் தீந்தமிழ் மொழியே சங்க காலம் தொட்டு இன்று வரை இணையில்லா இலக்கியச் செல்வங்களை தன்னகத்தே கொண்ட செல்வத்தமிழே! அறிவியல், விஞ்ஞான உலகில் சிறப்பொத்த நூல்களைப் படைத்து, மாந்தர் நின் திருவடியில் பணிவித்தார். காலங்கள் தோறும், நின் பெருமைகள் உலகத்தார் உணர்ந்திட, வழி செய்யும். எங்களின் தண்டமிழ் தாயே நிந்தன் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும், கண்டு மனதால் நினைக்கும் தோறும் இனிக்கும்.
💬 கருத்துகள் (0)