எண்ண எண்ண இனிக்குது.
பரத கண்டத்தின் தனி பெருவாழ்வே! திராவிடர் தம்மின் உயர்பொருளே!தென் மொழிகளை வளர்த்த தாயே!
என் அன்னையர் வழி வந்த தெய்வமே!
ஆதியில் இறையனாரும், கீரனாரும், அடுத்து கவிக்கம்பனும், ஒட்டக்கூத்தரும் எக்காலத்தும் அழியா, தமிழ் மறை வள்ளுவன் நடுவில் கவிவலவ சேக்கிழாரும், சிவப்பிரகாசரும், அடுத்து பாரதியும், அவன்தன் தாசனும், இன்று மகாகவி தாசனின் தாசன்கள், இனி என்றும், குறைவில்லா தமிழ் தேன் கண்ணதாசனும், கல்யாணசுந்தரமும் பொழியவரும் காலையில், நிறைமொழி கலைவாணரும், என்றும் பஞ்சமில்லை உன் பெருமை போற்றிடும் அடியவர் தமக்கு.
கன்னல் மொழி தமிழன்னையே! என்றும், நிந்தன் புகழ்கண்டு, எண்ண, எண்ண இனிக்குது.
💬 கருத்துகள் (0)