உள்ளடக்கத்திற்குச் செல்
எழுது
← முகப்பிற்குத் திரும்பு

செவாலியே தமிழன்

நாம் வைத்திருந்த தமிழேட்டில், ஒரு ஏடு மறைந்து விட்டது.
அது மூன்றாம் தமிழ்.
இனி அதற்கு உயிர் கொடுக்க ஆண்டவனே வந்தாலும், நடவாது.
ஏனெனில், மறைந்த அந்த திரை சிற்பியே, கூத்தபெருமானின் அவதாரம் தானே!
தமிழை, தமிழாக பேசிய ஒரே தமிழன் அவனே! ஆனால், இன்று பேசா மடந்தையாய், மௌனம் சாதிப்பது நடிப்பின் திறனோ! ஐயா, உன் பேச்சைக் கேட்டதால் தானே இன்று உலகமே உன்னை காண திரண்டு நிற்கிறது.
காற்றும் நுழையா, கண்ணாடி கூண்டுக்குள்ளே நீ மட்டும் எப்படி நிம்மதியாய் உறங்குகின்றாய்.
நீ பிராணயாமா கற்ற வித்தைக்காரனா?
பாரதி பரம்பரைக்குப் பிறகு உன்னுடைய கன்னல் மொழியால், தான் தமிழர் விழி பெற்றனர். இன்றவர் விழி நீர் பெருகி வர, நீயும் தேவன் திருவடியில் மூழ்கி விட்டாய். நடிப்பின் இமயமே! இனி உன்னை தொட யாரால் முடியும். உன்னுடைய நினைவுகளை எமது நெஞ்சம் தாங்கி, பாசத்திற்கு பஞ்சம் ஏற்பட்டதே என கண்கள் கலங்க, உமது பாதங்களை ஏக்கத்தோடு வணங்கி, வழி தெரியாமல் தன்னைத்தானே தேற்றி கொள்கிறது.

👁 13 வாசிப்பு ☰ 8 வரிகள் ⏱ 1 நிமிட வாசிப்பு
வாட்ஸ்அப்பில் பகிர் பேஸ்புக்கில் பகிர்

நிலைப் படம் தயார்!

உங்கள் கவிதை அழகிய பின்னணியுடன் படமாக மாற்றப்பட்டது. வாட்ஸ்அப் நிலை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்குப் பகிரலாம்.

ரவிராஜன் அவர்களின் மேலும் கவிதைகள்

சுட்டுவிரல் 🏆 1 வாரம் முன்

சுட்டு விரல்

0 14
இயற்கை 2 வாரம் முன்

எண்ண எண்ண இனிக்குது.

0 12
இயற்கை 2 வாரம் முன்

நினைத்தாலே இனிக்கும்

0 11
வாழ்க்கை 2 வாரம் முன்

அய்யன் வள்ளுவர் காட்டும் வழி

0 14

💬 கருத்துகள் (0)

உங்கள் கருத்தை எழுதுங்கள்

கருத்துகள் நிர்வாகி ஒப்புதலுக்குப் பிறகு காட்டப்படும்.