மெல்லிசை மேகமே எம் எஸ் வி
எளிமையின் உருவே!புன்னகை முகமே! ஏழிசை மன்னனே! ரசிகர்களின் கண்ணனே! உந்தன் இனிய கானமழையில், எங்களை நித்தமும் நனைய வைத்தாய்.
இன்னிசையால், எங்களை உன் பால் மயங்கச் செய்து, கட்டி வைத்தாய்.
என்றும் உங்கள் இசை வலையிலே, சிக்கித் தவிக்கும் இன்பத்தையே, எண்ணி எண்ணி ஏங்கி இருந்தோம்.
காலதேவன் இளைப்பாற, உன் இசை வேண்டுமென்று உத்தரவிட, எங்களைப் பிணைத்திருக்கும் உன் அன்பு வலையறுத்து, கண்ணீர் கடலில் தத்தளிக்க, தேவ விமானத்தில் பறந்து சென்றாய். உன் குரலோசையும், குழலோசையும் உறங்காத விழிகளுக்கு, ஆறுதலாய் இருப்பதை எண்ணி உம் புகழை காலமெல்லாம் பேசுகின்றன.
இசையால் அழியாப்புகழ் படைத்தாய்.
அகிலத்தில் ஆராய்ந்து பட்டம்பெறும் இளைஞர்கள், உன் இசை கடலில் மூழ்கி முத்து எடுப்பர்.
புதிய தலைமுறைக்கு வித்தாக நீ இருப்பாய்.
பூமி மீது விழும் சாரலாய், மீண்டும் வந்து எம்மை சேர்வாய் என்று காத்திருக்கிறோம்.
💬 கருத்துகள் (0)