வாணி இசை அரசி (M.S.சுப்புலட்சுமி)
இசையால் உலகம் யாவையும்,
உன் வசமாக்கி, எங்கள் செவிகள் சுவைக்க நல்லிசை அமுதம் தந்தாய்.
முத்தமிழில் இரண்டாம் தமிழ் நீ,
கலைவாணியின் திரு அவதாரம் நீ,
இசையால் கலையும், பக்தியும் தழைக்கச் செய்த தாய் நீ,
தேனினும் இனிய உன் குரல் வளத்தால்,
உலகத் தலைவர்களை அடிமை கொளச் செய்தாய் செய்தாய்.
மக்களை வேற்றுமை மறந்து ஒன்றுபடச் செய்தாய்.
பூவுலகில் உன் இசை பாடலினால், பூரிப்படைந்த இறைவன் உன்னை தன்னருகில் வைத்து,
சீராட்ட எண்ணி,
எங்களை கண்ணீர் கடலில் தவிக்க விட்டு விட்டாய்.
இதுவரை மானிடரை மகிழ்வித்த நீ,
தேவர் உலகையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த, எங்களை துயரத்தில் ஆழ்த்தினாயோ! ஏழிசை அரசியே! நீ மறைந்தாலும், உன் இனிய பாடல்கள் என்றும், எம் உள்ளங்களில் மறையாது வாழ்ந்திருக்கும்.
💬 கருத்துகள் (0)