விடுதலைத் திருநாள்
செந்நீர் சிந்தி, தாய்மண் காத்த செயல்வீரருக்கும், கண்ணீர் சிந்தி, அடிமைத்தளை அறுத்த கர்ம வீரர்க்கும்
சுகவாழ்வை துறந்து வறுமையை ஏற்ற செம்மல்களுக்கும், அடக்குமுறை ஆதிக்கத்தை அறவழியில் முறியடித்த உத்தமருக்கும், விடுதலை ஒன்றே வாழ்வென்று வீரம் காட்டிய நல்லாருக்கும், நாம் செலுத்தும் நன்றி கடன் என்றே அறிவிக்கும் திருநாள்.
அந்நிய மோகத்தால், பதவி ஆசையால், அதிகார பலத்தால், தற்புகழ்ச்சி மயக்கத்தால், பரந்த நோக்கின்றி பெருநிதி சேர்க்கும் விழைவால்,
நல்லவர், வல்லவர் அறவழி நடந்து, அல்லுற்று சுற்றம் மறந்து, என்றும் விடுதலை ஒன்றே உயிர் மூச்சாய் நினைத்து, தியாகங்கள் புரிந்து, பெரும் உயிர் சேதத்தை விலையாகத் தந்து,
இன்று யாவரும் இன்புற்று இருக்க எண்ணி, ஆனந்தமாய் பெற்று தந்த விடுதலை உரிமையை, என் நிலை எய்தினும், பிறர்வசம் வார்க்காமல் பேணிப் பாதுகாத்தல் நம் அனைவரின் கடமை என்றெண்ணி, உறுதி ஏற்கும் உன்னத திருநாள்.
💬 கருத்துகள் (0)