விஞ்ஞான தமிழன் அப்துல் கலாம்
ஏழ்மையில் பிறந்து, எளிமையாய் வாழ்ந்து, ஏற்றங்கள் கண்டு, ஏணியாய் திகழ்ந்து, கல்வியால் உயர்ந்து, கனவுகள் நனவாக கடின உழைப்பும், விடாமுயற்சியும், மலர்ந்த முகமும், மாறாத பண்பும், மழலைகள், மாணவர்களின் கனவு நாயகனாய், முன்னோடியாய் விளங்கி, பிறந்த மண்ணுக்கும், பேசிப் பயின்ற மொழிக்கும், மங்காத புகழை சேர்த்தாய். வாழ்நாளில் தான் கொண்ட கொள்கையில் வழுவாமல், சாதி, மதம் கடந்த மனித தெய்வமாய் வாழ்ந்து, உமது லட்சிய விதைகளை பதியவிட்டு பறந்து சென்றாய். நல்லோர் தவம் என்றும் பொய்க்காது. வீறுகொண்டு இளைய தலைமுறை மேல்எழும். இன்ப நிலையில் இந்தியா மூழ்கி திளைக்கும். உடலால் மறைந்தாலும் உள்ளத்தில் என்றும் ஒளிர்வீர்!
💬 கருத்துகள் (0)