சுட்டுவிரல் 2 வாரம் முன் இரண்டு மனம் ஏனோ என் மனம் இரண்டாக துடிக்கிறது! ஒன்று பகலை நினைக்கும் பொழுது உன்னோடு இருந்த இனிமையான தருணங்களும், இரவில் இருக்கும் போது உன்னுடன் நடந்த வாக்குவாதங்களும், சண்டைகளும் ஏனோ, என்னை காயப்படுத்துகின்றன...!! ♥ 0 💬 0 👁 14 🔖
சுட்டுவிரல் 2 வாரம் முன் நேசம் என் தோழியாக, என் காதலியாக, என் உயிரின் பாதியாக உன்னை மட்டுமே நேசிக்கிறேன். தொலைவில் இருந்து உன்னை காயப்படுத்தி விடக் கூடாது என்று..!! ♥ 0 💬 0 👁 14 🔖
சுட்டுவிரல் 2 வாரம் முன் ஏமாற்றம் ஒரு நாள் என்னை காண வருவாய். என்ற ஆசையில் என்னை விட்டு சென்ற அதே பேருந்து நிலையத்தில் பல வருடமாக காத்துக் கொண்டு நிற்கிறேன்..!! ♥ 0 💬 0 👁 13 🔖
சோகம் 2 வாரம் முன் பேருந்து பயணம் பேருந்து பயணத்தில் உன் நினைவுகள் மட்டும் என்னை ஆட்கொள்கின்றன. பேருந்து நிறுத்தம் வந்தவுடன் நீ என்னை விட்டு சென்றது போல் அந்த நிறுத்தத்தில் உன் நினைவுகளும் என்னை விட்டு செல்கின்றன..!! ♥ 0 💬 0 👁 13 🔖
வாழ்க்கை 2 வாரம் முன் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் நான் தேடி அலைந்து ஆசையாக வாங்கிய புத்தகம் தான். ஏதேனும் ஒரு பக்கம் மகிழ்வாக இருந்துவிடக் கூடாதா என்று தேட வைத்து பின் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் என்று முடிந்து விட்டது...!! ♥ 0 💬 0 👁 14 🔖
சோகம் 2 வாரம் முன் வலிகள் சில நேரங்களில் நம்மை காயப்படுத்துவது ஒரு வார்த்தை அல்ல அந்த வார்த்தையை சொன்னவர் யார் என்பதுதான்..!! ♥ 0 💬 0 👁 10 🔖
காதல் 2 வாரம் முன் நினைவுகள் பேருந்துப் பயணம்.. ஜன்னலோர இருக்கை; ஏனோ, உன் நினைவுகள் மட்டும் அருகில் அமர்ந்து கொண்டன. அழாமல் இருக்க முயன்ற கண்கள்.. கனத்த மனதுடன், தனிமையில் நீள்கிறது முழுதும் படி → ♥ 0 💬 0 👁 12 🔖
ஹைக்கூ 2 வாரம் முன் சிக்கனம் வானத்திற்கும் மாத கடைசி உண்டு போலும் நிலவை மட்டும் சிக்கனமாக பயன்படுத்துகிறது..!! ♥ 0 💬 0 👁 11 🔖
வாழ்க்கை 2 வாரம் முன் மூடநம்பிக்கை குருட்டுப் பூனை போகும் வழி தெரியாமல் நிற்கிறது குருக்கள் வீட்டு வாசலில் சகுனம் சரியில்லை சாமிக்கு பூஜை நாளைக்கு..!! ♥ 0 💬 0 👁 11 🔖
தத்துவம் 2 வாரம் முன் பரிகாரம் படைப்பில் கோட்டைவிட்ட கடவுளின் பிழையை, பரிகாரத்தில் சரி செய்வானாம் ஜோதிடன்.. யார் கடவுள்...? ♥ 0 💬 0 👁 10 🔖
வாழ்க்கை 2 வாரம் முன் மண்ணும் மனமும் வேடிக்கையாய் இருக்கிறது... கரை சேரும்வரை ரசித்து நடக்கப்பட்ட கடற்கரை மணல், கரையைக் கடந்தஉடன் உதறி விடப்படுவது..!! ♥ 0 💬 0 👁 12 🔖