வாழ்க்கை 3 வாரம் முன் எவ்வனமும் என் இடம் • முத்தமிட்டு செல்கிறது மழை, பித்துக்குளிப் போல் நனைகிறான், பிளம்பர், நீரோட்டத்தின் திசையை கண்டபடியே. • விருந்தினர் என்று வாட்டமாக நினைத்து கை அலம்பி விட்டு மேசையில் அமர்கிறார் முதியவர், இது சுய சேவை கடை என்பதை மறந்து. • பரதேசியைப் பார்ப்பது போல் எல்லோரும் ஏளனமாய் பார்க்கிறார்கள், பறக்கும் தட்டிருந்தால் நானும் ஏலியன் ஆகிருக்கலாம், அப்போதாவது ஆச்சரியமாய் பார்த்திருப்பார்கள். முழுதும் படி → ♥ 0 💬 0 👁 14 🔖
வாழ்க்கை 3 வாரம் முன் தெய்வ ஒளி ஒரு கோப்பை தேநீர் ஒரு துண்டு சிகரெட், சாம்பல் ஆகும் ஆயுள் என போதிக்கிறான் செயின் ஸ்மோக்கர், மின்னல் பட்ட மரத்திடம் முனிவரைப் போல், பீட்டரிடம் கோபித்துக் கொள்கிறார் அயோத்தி குல தரகர், ஆற்றங்கரையில் ஓடுவது ஒன்றும் அய்யன் ஏசுவின் இரத்தம் இல்லை என்று, பள்ளிவாசலில் அமரும் புறாக்களுக்கு ஓய்வே இல்லை, போதனைகளின் ஒலிச்சத்தத்தை அவைகளும் போதிக்க ஆரம்பித்ததோ என்னவோ, எப்போதுமே அவைகளிடம் அப்படி ஓர் அலறல் சத்தம், முழுதும் படி → ♥ 0 💬 0 👁 10 🔖
காதல் 3 வாரம் முன் ஆதலால் அவள் கற்பனை அல்ல அத்துமீறியே அந்தி நேரத்தில் அடைக்கலம் வேண்டி உன்னிடம் நின்றேன், அனைத்தையும் மறந்து அழகினில் வீழ்ந்தேன், எந்தன் உயிர் தோழியே உன்னை கெஞ்சி கேட்டேன் மௌனம் மட்டும் சாதித்து என்ன கண்டாய், பிஞ்சு விரல் கோர்த்து உலா வர கண்டேன் கொஞ்சும் கிளி போலே சட்டென பறந்தாய், முழுதும் படி → ♥ 0 💬 0 👁 16 🔖
ஹைக்கூ 3 வாரம் முன் பிழை முற்றிலும் பேச்சு வார்த்தை முறிந்து விட்டது, ஆம் குறுஞ்செய்தியில்க்கூட முன்பை போல் ஏதும் சரிவர நாட்டம் இல்லை, காதல் தான் இச்சமூகத்தின் பெரும் பிழையோ, அப்படி இல்லையெனில் நான் தான் பிழையா... ♥ 0 💬 0 👁 9 🔖
காதல் 3 வாரம் முன் என்றும் உன் நினைவு காற்றோடு பேசுதோ காதோடு பேசுதோ, யாரோடு பேசுகிறதோ இல்லையோ, என்னிடம் எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறது, உன் காதோரம் ஜிமிக்கி, பார்க்காமல் பார்க்கிறேனே நீ பார்த்தால் தோற்கிறேன், கேட்காமல் நீ இருக்க பேசியே தீர்க்கிறேன் சாலையில் உன்னிடம், சைகைகள் தேவையில்லை சில்மிஷங்கள் போதவில்லை, நீ அதட்டி போனப்பின்பும் என் கண்ணில் கோபம் இல்லை, பார்க்கிறேன் உன்னை நான் விட்ட பாதையை, திரும்பிப் பார் போகலாம் மீண்டும் வந்த பாதையில்... ♥ 0 💬 0 👁 12 🔖
வாழ்க்கை 3 வாரம் முன் அன்யோன்யம் அப்பட்டமாக தெரிகிறது எனக்கும், மற்றவருக்கும், கடவுளுக்கும் இருக்கும் அன்யோன்யம் அனைத்தும் அன்யோன்யமில்லா நெருக்கம் என்பது, நேற்றைக்கு சிலர், இன்றைக்கு சிலர், நாளையும் சிலர், எப்போதும் சிலர் என்னுடனான அன்யோனியத்தை விட்டு பிரிந்து செல்வது, எனக்கு ஒன்றும் புதிதல்ல, இலையுதிர் காலத்தின் காய்ந்த இலைகளுக்கு உண்டான அன்யோன்யம் கூட இவர்கள் இடத்தில் நான் கண்டதில்லை, முழுதும் படி → ♥ 0 💬 0 👁 11 🔖
வாழ்க்கை 3 வாரம் முன் கூட்டில் இன்னும் இடம் காலியாகதான் உள்ளது அவளுக்கென ஓர் உலகம் படைக்க நான் ஒன்றும் கடவுள் இல்லை, ஆனாலும் ஓர் நினைவினை படைத்தேன், பிடித்த மாதிரி இல்லை என்பதால் என்னவோ, பிரிந்திருக்கலாம் அவளும் ஓர் பெண் தானே, நிறைய முறை பறக்க கூப்பிட்டேன் இறக்கைகள் வாங்கி வந்தும் கூப்பிட்டேன் இப்போது தான் புரிகிறது ஏன் நாங்கள் பறக்கவில்லை என்று, முழுதும் படி → ♥ 0 💬 0 👁 6 🔖
சோகம் 3 வாரம் முன் இனி நான் யாரோ பொல்லாத அன்பைதான் சொல்லாமல் போனதால், தள்ளாட்டம் போடுதே கால்கள், கண்ணீரில் மூழ்குதே கண்கள், என் பக்க காதல்தான் சேராமல் போனதால், நீ மாற்றம் கேட்டதால், நான் ஒப்புக் கொள்கிறேன் இனி எட்டி நிற்கிறேன், உன்னோடு சேர்ந்து நான் அன்பை பகிரத்தான் ஏங்கி கிடக்கிறேன், நீ தட்டிக்கழித்தால் தன்மானம் இழந்துமே, மீண்டும் தேடி வருகிறேன், முழுதும் படி → ♥ 0 💬 0 👁 15 🔖
வாழ்க்கை 3 வாரம் முன் அரக்கத்தனமான மழைக்காலம்… என் எதிரி எட்டுக்கால் பூச்சி என் கழிவறையில் அம்மனமாய் தொத்திக் கொண்டு, ஆர்வமாய் என்னைப் பார்த்து ஆரவாரமாய் ஊஞ்சல் ஆடுகிறது அவனை பார்த்து இந்த தருணம் பொறாமை படுகிறேன், அவனைப் போல் இருந்தால் என் வீட்டு தாழ்வாரமும் இன்று வெள்ளத்தில் மூழ்கிருக்காது... ஈக்கள் எள்ளாம் தற்போது என் அண்டை வீட்டாளன் போல், நான் சாப்பிட அமர்ந்தால் அவைகள் என் அழையா விருந்தாளியாய் என்னைக் கேட்காமல் என் பதார்த்தத்தை ருசி பார்க்கின்றன எனக்கு முன முழுதும் படி → ♥ 0 💬 0 👁 7 🔖
வாழ்க்கை 3 வாரம் முன் மழையின் வருகை செல்வ செழிப்பாக பெருகிவரும் மழை , நிற்க இடமில்லாமல் வாடுகிறது தெருநாய் கூட்டம், தாழ்வாரம் எங்கும் திடீரென முளைக்கும் காளான்கள், பிடிங்கி எறிய மனமில்லை, தன் வாயால் கெட்டொழியும் தவளை பிள்ளைகள் அடைக்கலம் வேண்டி, பாம்பிற்கு பயந்து படுக்கையறை வந்தது, குட்டிகளை ஈன்ற பூனைக்கு விருந்தாக ரொட்டி துண்டு, பாலை வாய்க்க அது ஒன்னும் யோகியம் உள்ளது இல்லை, முழுதும் படி → ♥ 0 💬 0 👁 7 🔖
ஹைக்கூ 3 வாரம் முன் தீ தீப்பிழம்பாய் பற்றி எரிகிறது கவிக்கூடு, தண்ணீர் ஊற்றி அமைக்கத் தான் கவிஞர்களை காணவில்லை. ♥ 0 💬 0 👁 10 🔖
வாழ்க்கை 3 வாரம் முன் கடலின் மகா மௌனம் மணலோடு மெருகேற்றி அதன் மேலே அலைகள், என் காலில் பட்டு கரை செல்லுதே, பதினாறு நாட்கள் வயதான குழந்தை தீட்டென்ற பெயரில் கரைகின்றதே, மணல் மீது கட்டிய பல காதல் கோட்டைகள் சில நேரம் நண்டின் குடில் ஆகுதே, முழுதும் படி → ♥ 0 💬 0 👁 6 🔖